| பசுந்தாள் உரம் 
 பசுந்தாள்  உரம்
 பசுந்தாள் உரம் என்பது பசுமையான சிதைக்கப்படாத பொருள்களை  உரமாகப் பயன்படுத்துதல் ஆகும். 2 வழிகளில் இதைப் பெறலாம். பசுந்தாள் பயிர்களை வளர்ப்பதன்  மூலமோ அல்லது தரிசுநிலம், வயல் வரப்பு, காடுகளில் வளரும் மரங்களிலிருந்தோ எடுக்கப்படும்.  பசுந்தழைகளின் மூலமும் பெறலாம். பசுந்தாள் உரம் என்பது பயிறு வகைகளை பயிரிட்டு, பின்  போதுமான வளர்ச்சி அடைந்தவுடன் மண்ணில் உழவேண்டும். பசுந்தாள் உரத்திற்காக வளர்க்கப்படும்  பயிர்கள் பசுந்தாள் உரப்பயிர்களாகும். முக்கியமான  பசுந்தாள் உரப்பயிர்கள்: சணப்பு, தக்கைப் பூண்டு, பில்லி பயிறு, கொத்தவரை,  அகத்தி.
 
 அங்கக  உயிர்ப் பொருள் உற்பத்தி மற்றும் பசுந்தாள் உரத்தில் தழைச்சத்தின் அளவு: 
        
          | பயிர் | வயது    (நாட்கள்) | உலர்    பொருள் (டன் / எக்டர்) | தழைச்சத்தின்    அளவு |  
          | அகத்தி | 60 | 23.2 | 133 |  
          | சணப்பு | 60 | 30.6 | 134 |  
          | தட்டைப்பயிறு | 60 | 23.2 | 74 |  
          | பில்லிப்பயிறு | 60 | 25.0 | 102 |  
          | கொத்தவரை | 50 | 3.2 | 91 |  பசுந்தாள்  உரத்தின் ஊட்ட அளவு: 
        
          | பயிர் | அறிவியல்    பெயர் | உலர்    நிலையில் ஊட்ட அளவு (சதவீதத்தில்) |  
          | தழைச்    சத்து | மணிச்    சத்து | சாம்பல்    சத்து |  
          | சணப்பு | குரோட்டலேரியா    ஜன்சியா | 2.30 | 0.50 | 1.80 |  
          | தக்கைப்    பூண்டு வகை | செஸ்பேனியா    அக்குலேட்டா | 3.50 | 0.60 | 1.20 |  
          | அகத்தி    வகை | செஸ்பேனியா    ஸ்பிஸியோகா | 2.71 | 0.53 | 2.21 |  தக்கைப் பூண்டு என்பது தண்டுப்  பகுதியில் முடிச்சுள்ள பசுந்தாள் உரப் பயிராகும். இதனுடைய தாயகம் மேற்கு ஆப்ரிக்கா.  இது ஒரு குறைவான வாழ்நாள் உடைய தாவரம். ஒளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளிதில் கிரகித்துக்  கொள்ளும். தழைப் பருவத்தின் கால அளவு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் விதைக்கும்  பொழுது குறைவாக இருக்கும். மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி நிலையம் உருவாக்கிய  திடீர் மாதிரி ஒளிக்கால அளவுக்கு ஏற்றவாறு எளிதில் கிரகித்துக் கொள்ளாது, உப்புத்தன்மை  மற்றும் நீர்தேங்கிய நிலைகளை தாங்கக்கூடியது. வளர்ச்சி மற்றும் தழைச்சத்து நிலைப்படுத்துதல்  டி. எஸ். ஆர் - 1 இரகத்தில் மற்ற இரகங்களை விட அதிகமாக இருக்கும். பயன்கள்: 
        மண் அமைப்பை மேம்படுத்தும்.நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும்.மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும். 
 மேலே செல்க பசுந்தழை உரம்
 பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட இலைகள், மரங்களின் கொம்புகள், புதர்செடி, சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும். காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும். பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் ஆகும். பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் - வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம் (புங்காமியா க்ளாபரா) எருக்கு, அகத்தி (செஸ்பேனியா க்ரேன்டி ப்ளோரா), சுபாபுல் மற்றும் மற்ற புதர் செடிகள்.
 
 பசுந்தழை உரத்தின் ஊட்ட அளவு:
 
        
          
            | தாவரம் / செடி | அறிவியல் பெயர் | உலர் நிலையில் ஊட்ட அளவு (சதவீதத்தில்) |  
            | தழைச் சத்து | மணிச் சத்து | சாம்பல் சத்து |  
            | வாகை | கிளைசிடியா செபியம் | 2.76 | 0.28 | 4.60 |  
            | புங்கம் | புங்காமியா க்ளாபரா | 3.31 | 0.44 | 2.39 |  
            | வேம்பு | அசோராடிக்கா இண்டிகா | 2.83 | 0.28 | 0.35 |  
            | மயில் கொன்றை | டிலோனிக்ஸ் ரெஜியா | 2.76 | 0.46 | 0.50 |  
            | பெல்டோபோரம் | பெல்டோபோரம் பெருஜினம் | 2.63 | 0.37 | 0.50 |  
            | களைச் செடிகள் |  
            | பார்த்தினியம் | பார்த்தினியம் ஹிஸ்டிரோபோரஸ் | 2.68 | 0.68 | 1.45 |  
            | வெங்காயத் தாமரை | எக்கோரினியா கிரேஸிப்ஸ் | 3.01 | 0.90 | 0.15 |  
            | சாரணை | டிரையாந்திமா போர்ட்லோ - கேஸ்ட்ரம் | 2.64 | 0.43 | 1.30 |  
            | சர்க்கரை வள்ளிக் கிழங்கு | ஐபோமியா | 2.01 | 0.33 | 0.40 |  
            | எருக்கு | கலோடிராபிஸ் ஜெஜான்டியா | 2.06 | 0.54 | 0.31 |  
            | சரக்கொன்றை | கேசியா பிஸ்டுலா | 1.60 | 0.24 | 1.20 |  நன்மைகள்: 
        பசுந்தழை உரமிடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம். நீர் பிடிப்பு திறனை அதிகரிக்கும். மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்கும்.பயிர்கள் எதுவும் பயிரிடப்படாத பருவத்தில் வளர்க்கப்படும். பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்காரத் தன்மையுள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது. வேர் முடிச்சு நூற்புழுக்களைக் கட்டுப்படுத்தலாம். 
 மேலே செல்க |